Type to search

வாங்கியதை திருப்பிக்கொடுத்த ஜப்பான்!!!

FIFA 2018 Foot Ball SPORTS SPORTS TOP STORY

வாங்கியதை திருப்பிக்கொடுத்த ஜப்பான்!!!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற எச் பிரிவுக்கான போட்டியில் கொலம்பியாவை எதிர்கொண்ட ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் அணி வெளியேறியிருந்தது. அதுவும் நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில், கொலம்பியாவை எதிர்கொண்ட ஜப்பான் 1-4 என படுதோல்வியுடன் வெளியேறியிருந்தமை அவர்களால் மறக்கமுடியாத தோல்வியாகவும் அமைந்திருந்தது.

இந்நிலையில் கொலம்பியாவை பலி தீர்க்க சரியான வாய்ப்பை பார்த்துக் காத்திருந்த ஜப்பான் அணிக்கு இன்றைய போட்டி ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம்.

அதிலும் இன்றைய போட்டியில் ஜப்பான் அணி கொலம்பியா அணிக்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் எழுந்திருந்தது.

எனினும் ஜப்பான் அணியின் வரலாறு அவர்களுக்கு சாதகமாக இல்லை. 11 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றிருந்தது. அதுவும் விளையாடிய 5 முதல் போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே ஜப்பான் அணி வெற்றிபெற்றிருந்தது.

ஆனால் கொலம்பியா அணி கடந்த வருடம் தங்களை பலமான அணியாக சர்வதேச அணிகளுக்கு காட்டிச்சென்றது. அந்த அணி 2014ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் காலிறுவரை முன்னேறியிருந்தது.

இதனால் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருந்த இந்த இரு அணிகளும் போட்டியின் ஆரம்பம் முதலே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருந்தன.

எனினும் பலிவாங்கும் நோக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி தங்களது முழு ஆதிக்கத்தையும் போட்டியில் செலுத்தியிருந்தது.

போட்டியின் ஆறாவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் மத்தியக்கள வீரர் ஷின்ஜி ககவாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்ததன் ஊடாக ஜப்பான் அணி 1-0 என முன்னிலைப்பெற்றது.

ஆரம்பத்திலேயே பி்ன்னடைவை சந்தித்த கொலம்பிய அணி தங்களை முன்னேற்றுவதற்கான ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன்பலனாக 39வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் மத்தியக்கள வீரர் ஜுவான் பெர்னாண்டோ கியூண்டரோ கோலடித்து போட்டியை சமப்படுத்தினார். தொடர்ந்து கோல்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட, முதற்பாதி 1-1 என நிறைவுக்கு வந்தது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியில் பந்தை தங்கள் கைவசப்படுத்தி வைத்திருந்த, ஜப்பான் அணி 73வது நிமிடத்தில் யுயா ஒசாகாவின் அற்புதமான கோலின் உதவியுடன் முன்னிலையை 2-1 ஆக உயர்த்தியது.

தொடர்ந்து கொலம்பிய அணி கோலடிக்க முற்பட்ட போதிலும், ஜப்பான் வீரர்கள் வாய்ப்புகளை தட்டிப்பறித்து வெற்றியை தக்கவைத்தனர்.

இதன்படி இம்முறை உலகக்கிண்ணத்தை ஜப்பான் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Japan beat Colombia FIFA World cup 2018, Japan beat Colombia FIFA World cup 2018, Japan beat Colombia FIFA World cup 2018

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like