அவுஸ்திரேலியாவை சாதனை வெற்றியுடன் வீழ்த்தியது நியுஸிலாந்து!
Share

New Zealand thrash Australia Rugby Championship
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ப்ளடிசோல் ரக்பி தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் 54-34 என நியுஸிலாந்து அணி சாதனை வெற்றியை பதிவுசெய்தது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 52-20 என பெறப்பட்ட தனது முன்னைய சாதனையை முறியடித்தே நியுஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் உலக்கிண்ண நடப்பு சம்பியனான நியுஸிலாந்து அணிக்கு பலத்த போட்டியை அவுஸ்திரேலிய அணி கொடுத்தும், முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடியிருந்தமையே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
போட்டியின் முதல் பாதியில் அபாரமாக ஆடிய நியுஸிமலாந்து அணி 40 புள்ளிகளை எடுத்து அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சிக்கொடுத்தது. முதல் பாதியில் அவுஸ்திரேலிய அணியால் 6 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது.
எனினும் இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய அவுஸ்திரேலிய அணி 28 புள்ளிகளை குவிக்க, நியுஸிலாந்மு அணி இரண்டாம் பாதியில் 24 புள்ளிகளை மாத்திரம் பெற்றது.
அவுஸ்திரேலிய அணி முதல் பாதியில் விட்ட தவறுகளே அந்த அணியின் வெற்றியை பறித்ததாக சமுக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
<<More News>>
- ஸ்ரீ லங்கா றக்பி சுப்பர் செவன்ஸ் சம்பியனானது ஈகள்ஸ்!
- உலகத் தரப்படுத்தலில் முன்னேறுவதே இலக்கு : அசங்க செனவிரத்ன
- சவால் கிண்ண ரக்பி : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விகன் வொரியஸ்!
- மகளிர் ரக்பி உலகக்கிண்ணம் : அயர்லாந்து, நியுஸிலாந்து அணிகள் வெற்றி!
<<Our other websites>>
New Zealand thrash Australia Rugby Championship, Rugby news in Tamil, Sports news in Tamil, Latest rugby news in Tamil, Live Rugby update