Type to search

சொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா! : வீழ்ந்தது எகிப்து!!!

FIFA 2018 Foot Ball SPORTS SPORTS TOP STORY

சொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா! : வீழ்ந்தது எகிப்து!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிபா உலகக்கிண்ணத்தின் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான மிக விறுவிறுப்பான போட்டியில் ரஷ்ய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

ரஷ்ய அணி ஏற்கனவே தங்களது முதல் போட்டியில் சவுதி அரேபிய அணியை 5-0 என வீழ்த்தி முழு நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில், எகிப்து அணியை எதிர்த்து களமிறங்கியது.

உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக இந்த போட்டி அமைந்திருந்தது.

ஆரம்பித்திலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற முதற்பாதியில் இரண்டு அணிகளும் பலத்த போட்டியை வெளிப்படுத்திய போதிலும், கோல்கள் அடிக்கும் வாய்ப்புகள் சரியான முறையில் அமையவில்லை.

இதனால் முதற்பாதி கோல்கள் இன்றி நிறைவுக்கு வந்தது.

எனினும் இரண்டாவது பாதி ஆரம்பித்தவுடன் ரஷ்ய அணிக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டின. ரஷ்ய அணியின் முதலாவது கோலை 47வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் சொப்னின் அடிக்க முற்பட்டார். இதன்போது அதனை தடுக்க முற்பட்ட எகிப்து அணியின் அஹமட் பெதியின் காலில் பட்டு பந்து நேரடியாக எகிப்து அணியின் கோல் எல்லைக்குள் துரதிஷ்ட வசமாக நுழைந்தது.

இதனால் ரஷ்ய அணியின் முதல் கோல், எகிப்து அணியால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்ய அணி முன்னிலைப்பெற்ற உத்வேகத்துடன் ஆட, தொடர்ச்சியாக இரண்டு கோல்களை அடித்து 3-0 என முன்னிலைப்பெற்றது.

ரஷ்ய அணியின் டெனிஷ் செரிஷேவ் 59 வது நிமிடத்திலும், எர்டெம் ட்ஷெயுபா 62 வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

இதனால் 0-3 என பின்தங்கிய எகிப்து அணி பல முயற்சிகளை மேற்கொண்டது. முயற்சிகளின் படி 73வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மொஹமது சலாஹ் கோலாக்கிய போதிலும், எகிப்து அணியால் இறுதிவரை போராடி ஒரு கோலை மாத்திரமே பெறமுடிந்தது.

இதன்படி 3-1 என வெற்றிபெற்ற ரஷ்ய அணி, தங்கள் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, ஏ குழுவில் முன்னிலைப்பெற்றுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Russia vs Egypt fifa world cup 2018 news Tamil, Russia vs Egypt fifa world cup 2018 news Tamil, Russia vs Egypt fifa world cup 2018 news Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like