Type to search

மெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா! : இன்று களத்தில்…

FIFA 2018 Foot Ball Latest Sports SPORTS SPORTS HEAD LINES

மெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா! : இன்று களத்தில்…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிபா உலகக்கிண்ண தொடரி்ன் டி குழுவுக்கான இன்றைய முக்கியமான போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இம்முறை உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் குரோஷியா அணி தங்களது முதல் போட்டியில் நைஜீரியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

ஆனால் ஆர்ஜன்டீன அணி புதுவரவு அணியான ஐஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியை 1-1 என சமப்படுத்தி இன்றைய போட்டியில் களமிறங்குகின்றது.

ஆர்ஜன்டீன அணிக்கு இன்றைய போட்டி மிகமுக்கியமான போட்டியாக அமையவுள்ளது. உலகக்கிண்ணத்தில் தொடர்ந்து தங்களது இடத்தை தக்கவைப்பதற்கு இன்றைய வெற்றி மிக முக்கியம்.

அவர்களது குழுவில் ஆர்ஜன்டீன அணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும், அவர்களுக்கு சவால் விடுக்கக்கூடிய அணியாக ஐஸ்லாந்து மாறியுள்ளது.

முதல் போட்டியை சமப்படுத்தியுள்ளதால், நைஜீரிய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் ஐஸ்லாந்து வெற்றிபெற்றால் அவர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். குரோஷியா அணி ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு இன்னுமொரு வெற்றியோ அல்லது, இரண்டு சமனிலைப்போட்டிகள் கிடைக்குமாயின் அவர்கள் உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைப்பர்.

ஆர்ஜன்டீனா மற்றும் குரோஷிய அணிகள் இதற்கு முன்னர் 5 தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்ஜன்டீனா 2 வெற்றிகளையும், குரோஷியா ஒரு வெற்றியையும் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

ஆனால் இரு அணிகளுக்கும் இடையில் உலகக்கிண்ணத்தில் ஒரே ஒரு சந்திப்பு மாத்திரமே இடம்பெற்றுள்ளது. 1998ம் ஆண்டு நடைபெற்ற குறித்த போட்டியில் ஆர்ஜன்டீன அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.

குரோட்டிய அணி நான்கு உலகக்கிண்ண போட்டிகளில் தென் அமெரிக்க அணிகளை எதிர்கொண்டு, அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆர்ஜன்டீன அணி முன்னேற வாய்ப்புள்ளது. எனினும இம்முறை உலகக்கிண்ணத்தில் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுள்ள குரோஷிய அணி, அர்ஜன்டீன அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜன்டீன அணிக்கு இத்தனை சவால்கள் ஏற்படக் காரணம், ஐஸ்லாந்து அணிக்கெதிரான முதல் போட்டியில் மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி வாய்ப்புதான் என ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது.

ஆர்ஜன்டீனா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 11.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Argentina vs Croatia fifa world cup 2018 preview, Argentina vs Croatia fifa world cup 2018 preview, Argentina vs Croatia fifa world cup 2018 preview


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like