Type to search

32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க்! : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்!

FIFA 2018 Foot Ball Latest Sports SPORTS SPORTS HEAD LINES

32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க்! : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிபா உலகக்கிண்ணத்தில் இன்று நடைபெறவுள்ள தங்களுடைய இரண்டாவது போட்டியில் டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். முதல் போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 1-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பெறமுடியும்.

டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இதற்கு முன்னர் நான்கு போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன.

இதில் டென்மார்க் 2 போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலிய அணி, உலகக்கிண்ணத்தில் ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டியை சமனிலைப்படுத்தியுள்ளது.

குறித்த ஒரு வெற்றியானது கடந்த 2010ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் சேர்பிய அணிக்கெதிராக (2-1) பெறப்பட்டது.

இதேவேளை டென்மார்க் அணி தங்களது முதல் போட்டியி்ல் டென்மார்க் அணியை 1-0 என வீழ்த்தியிருந்தது. இதனால் அவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைப்பதற்கு, இந்த போட்டியை சமனிலைப்படுத்தினாலே போதும்.

டென்மார்க் அணி இதுவரையில் விளையாடிய உலகக்கிண்ண தொடரில், 1986ம் ஆண்டு மாத்திரமே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் குறித்த சாதனையை டென்மார்க் அணி இன்று சமப்படுத்தும்.

இதனால் இன்றைய போட்டியில் 32 வருடகால சாதனையை டென்மார்க் சமப்படுத்துமா? அல்லது அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைக்குமா? என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்,

இந்த போட்டி இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Denmark vs Australia world cup 2018 news Tamil,Denmark vs Australia world cup 2018 news Tamil,Denmark vs Australia world cup 2018 news Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like