Type to search

திரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா!!!

FIFA 2018 Foot Ball SPORTS SPORTS TOP STORY

திரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இவ்வருட உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுகளில் இருந்து இரண்டு அணிகளும் வெளியேறியுள்ள நிலையில், தங்களுக்கான ஆறுதல் வெற்றியை நோக்கி இரண்டு அணிகளும் களமிறங்கின.

இந்த போட்டியில் எகிப்து அணியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மொஹமது சாலாஹ் 22வது நிமிடத்தில் அணிக்காக முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.

எனினும் முன்னிலையை தகர்க்கப்போராடிய சவுதி அரேபிய அணி, விட்டுக்கொடுக்காமல் விளையாடியது. இதில் முதற்பாதியில் மேலதிக நேரம் வழங்கப்பட, சவுதி அணிக்கு 45 (+6) நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திய சவுதி அரேபிய அணியின்அல் முவால்லட் அணிக்கு முதல் கோலை பெற்றுக்கொடுக்க, முதற்பாதி 1-1 என முடிவுக்கு வந்தது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு விளையாடின.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் இன்றி தடுமாறின. இந்த உலகக்கிண்ணத்தில் இரண்டு அணிகளும் ஒரு வெற்றியாவது பெறவேண்டும் என்ற ஆக்ரோஷம் போட்டியில் தென்பட்டது.

போட்டியின் 90 நிமிடங்கள் வரை இரண்டு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனால் போட்டியில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இதில் 90 (+5) நிமிடத்தில் சவுதி அரேபிய அணியின் அல் டவ்சரி கோலடித்து அணியின் திரில் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன்படி போட்டியில் சவுதி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

சவுதி அணி இந்த போட்டியில் வெற்றிபெற்ற போதிலும், உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

saudi arabia vs Egypt fifa world cup 2018, saudi arabia vs Egypt fifa world cup 2018, saudi arabia vs Egypt fifa world cup 2018


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like