Type to search

போட்டி சமனிலையில்!!! : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…

FIFA 2018 Foot Ball SPORTS SPORTS TOP STORY

போட்டி சமனிலையில்!!! : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பிபா உலகக்கிண்ண தொடரின் சி குழுவிலிருந்து அடுத்தச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் முன்னேறியுள்ளன.

இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டி 0-0 என சமனிலையில் நிறைவடைய இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

சி குழுவில் 6 புள்ளிகளுடன் இருந்த பிரான்ஸ் அணி, மேலதிகமாக ஒரு புள்ளியை பெற்று, முதலிடத்திலும், நான்கு புள்ளிகளை பெற்றிருந்த டென்மார்க் அணி மேலும் ஒரு புள்ளியுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துக்கொண்டன.

பிரான்ஸ் அணி தங்களது உலகக்கிண்ண இருப்பை ஏற்கனவே தக்கவைத்திருந்த நிலையில், இன்று டென்மார்க் அணி உறுதிசெய்துக்கொண்டது.

பெரு மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இன்று அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, மறுமுனையில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தால், டென்மார்க் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவதில் சிக்கல்கள் இருந்திருக்கும்.

எனினும் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததால், டென்மார்க் அணி, இலகுவாக முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியை பொருத்தவரையில், இரண்டு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தின. மொத்தமாக கோல் எல்லையை நோக்கி பிரான்ஸ் அணி மூன்று முயற்சிகளையும், டென்மார்க் அணி ஒரு முயற்சியையும் எடுத்திருந்தன.

போட்டியை பொருத்தவரை 68 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரான்ஸ் அணியால் ஒரு கோலையும் அடிக்க முடியவில்லை.

மேலதிகமாக நான்கு நிமிடங்கள் வழங்கப்பட்டும் எந்த அணிகளாலும் கோலடிக்க முடியாததால், போட்டி 0-0 என நிறைவுக்கு வந்தது.

போட்டி சமனிலையில் நிறைவுபெற, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

 

France vs Denmark Fifa world cup 2018 news Tamil, France vs Denmark Fifa world cup 2018 news Tamil, France vs Denmark Fifa world cup 2018 news Tamil


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like