Type to search

அவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு!

FIFA 2018 Foot Ball SPORTS SPORTS TOP STORY

அவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சீ குழுவுக்கான போட்டியில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண வாய்ப்பை பறித்தது.

இன்று நடைபெற்ற சீ குழுவின் தங்களுடைய மூன்றாவது போட்டியில் பெரு மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

பெரு அணி ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருந்தது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்குமாயின் அவுஸ்திரேலிய அணிக்கு உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பிருந்தது.

எனினும் அவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண வாய்ப்பை பெரு அணி இன்று தகர்த்தெறிந்துள்ளது.

போட்டியின் முதற்பாதியில் இருந்து இரண்டு அணிகளும் சிறப்பாக ஆடின. அதிலும் அவுஸ்திரேலிய அணிய போட்டியின் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டது. எனினும் கோலடிக்கும் வாய்ப்புகளை தடுத்த பெரு அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது.

முதலாவது கோலை பெரு அணியின் கெரில்லோ 18வது நிமிடத்தில் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட, முதற்பாதியில் 1-0 என பெரு அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது பாதியிலும் சிறப்பாக ஆடிய பெரு அணி 50வது நிமிடத்தில் குவெரெரோவின் உதவியுடன் மற்றுமொரு கோலை அடித்து முன்னிலையை 2-0 என உயர்த்தியது.

மிகுதி நேரங்களில் அவுஸ்திரேலிய அணி, கோலடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது.

எனினும் வாய்ப்புகள் கைநழுவப்பட, பெரு அணி 2-0 என வெற்றிபெற்றது.

பெரு அணி போட்டியில் வெற்றிபெற்று வெளியேறியதுடன், அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்து வாய்ப்பை இழந்தது.

சீ குழுவிலிருந்து அடுத்த சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் தகுதிப்பெற்றன.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Peru vs Australia Fifa world cup 2018, Peru vs Australia Fifa world cup 2018, Peru vs Australia Fifa world cup 2018


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like