Type to search

உலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

FIFA 2018 Foot Ball SPORTS SPORTS HEAD LINES

உலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பிபா உலகக்கிண்ணத்தின் இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் தோல்வியை தழுவி ஜேர்மனி அணி உலகக்கிண்ணத்தின் குழுநிலை சுற்றுடன் வெளியேறியுள்ளது.

எப் குழுவுக்கான இன்றைய போட்டியில் தென் கொரியாவுடன் மோதிய ஜெர்மனி, 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது.

கடந்த சில உலகக்கிண்ணங்களில் நடப்பு சம்பியன்களுக்கு ஏற்படும் அவலநிலையை ஜேர்மனி அணிக்கும் ஏற்பட்டுள்ளமை ரசிகர்களிடையில் பல கேள்விகளையும் முன்வைத்துச் சென்றுள்ளது.

1998ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ் அணி, 2006ம் ஆண்டு சம்பியனாகிய இத்தாலி அணி, 2010ம் ஆண்டு சம்பியனாகிய ஸ்பெயின் அணிகள், தங்களுடைய அடுத்த உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தன.

அந்த வரிசையில் இன்று ஜேர்மனியும் இணைந்துள்ளது.

இன்றைய போட்டியில் முதற்பாதி கோல்கள் இன்றி நிறைவடைய, இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடிய தென் கொரிய அணி இரண்டு கோல்களை அடித்து வெற்றியை தக்கவைத்தது.

போட்டியின் 90 (2) நிமிடத்தில் வை. கிம் கோலடித்ததுடன், 90 (6) நிமிடத்தில் எச்.சன் கோலடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற தென்கொரிய அணியும் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியதுடன், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜேர்மனியை தென்கொரிய அணி வெளியேற்றியமை ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இதேவேளை எப் குழுவுக்கான மற்றுமொரு போட்டியில் மெக்ஸிகோ அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய சுவீடன் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்த போட்டியிலும் முதற்பாதியில் கோல்கள் பெறப்படாத நிலையில், இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய சுவீடன் தொடர்ந்து மூன்று கோல்களை அடித்தது.

போட்டியின் 50வது நிமிடத்தில் சுவீடன் அணியின் ஆகஸ்டின்சன் கோலடிக்க, 62வது நிமிடத்தில் கிரேன்குவிஸ்ட் கோலடித்து அணியின் முன்னிலையை 2 ஆக உயர்த்தினார்.

தொடர்ந்து போட்டியின் 74வது நிமிடத்தில் சுவீடன் அணி அடிக்க முயன்ற கோலை மெக்ஸிகோ அணியின் அல்வெரஷ் தடுக்க முற்பட்ட நிலையில், பந்து தவறுதலாக தங்களுடைய கோல் எல்லைக்குள் சென்றது. இதனால் கோல் எதிரணிக்கு வழங்கப்பட, சுவீடன் அணி 3-0 என வெற்றிபெற்றது.

இதன்மூலம் எச் குழுவில் இருந்து சுவீடன் மற்றும் மெக்ஸிகோ அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

 

South Korea vs Germany fifa world cup 2018, South Korea vs Germany fifa world cup 2018, South Korea vs Germany fifa world cup 2018


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like