Type to search

பிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்!!!

FIFA 2018 Foot Ball SPORTS SPORTS TOP STORY

பிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற சேர்பியா அணிக்கெதிரான போட்டியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இம்முறை உலகக்கிண்ணத்தில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிரேசில் அணி இரண்டு வெற்றி மற்றும் ஒரு சமனிலைப்போட்டியுடன் 7 புள்ளிகளை பெற்று ஈ குழுவில் முதலிடத்தை தக்கவைத்தது.

நொக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பைத் தேடிய சேர்பிய அணி நேற்றைய தோல்வியால் மீண்டும் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியுள்ளது.

குடியரசில் இருந்து பிரிந்த பின்னர் சேர்பிய இதுவரை மூன்று உலகக்கிண்ணங்களில் விளையாடியுள்ளதுடன், குறித்த மூன்று தோடர்களிலும் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றிருந்தால் சேர்பிய அணிக்கு உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்த போதும், பிரேசில் அணி குறித்த வாய்ப்பை பறித்தெடுத்துள்ளது.

பிரேசில் அணி தொடர்ச்சியாக 13 உலகக்கிண்ணத் தொடர்களின் முதல் சுற்றுகளில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுகளுக்கு தகுதிபெற்றுள்ளது.

இதேவேளை கோஸ்டா ரிக்கா அணியுடனான போட்டியை 2-2 என சமப்படுத்திய சுவிஸ்லாந்து அணி உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், இரண்டு போட்டிகளை சமப்படுத்தியும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இதேவேளை நொக்கவுட் சுற்றில் சுவிஸ்லாந்து அணி சுவீடன் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், பிரேசில் அணி மெக்ஸிகோவை எதிர்கொள்ளவுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Brazil vs Serbia fifa world cup 2018, Brazil vs Serbia fifa world cup 2018, Brazil vs Serbia fifa world cup 2018


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like