Type to search

ஒரு வெற்றியால் பூரிப்படைந்த முர்ரேவுக்கு மீண்டும் தோல்வி…

SPORTS SPORTS HEAD LINES Tennis

ஒரு வெற்றியால் பூரிப்படைந்த முர்ரேவுக்கு மீண்டும் தோல்வி…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஆண்டி முர்ரே தோல்வியுடன் வெளியேறியுள்ளார்.

முன்னாள் சர்வதேச தரப்படுத்தல் மற்றும் பிரித்தானிய தரப்படுத்தலில் முதலிடம் வகித்த ஆண்டி முர்ரே, தற்போதைய பிரித்தானிய நம்பர் ஒன் வீரர், கெயல் எட்முண்ட்டுடன் படுதோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

சுமார் ஒருவருட காலத்துக்கு பின்னர் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் தொடரின் முதல் சுற்றில் ஸ்டேன் வவ்ரிங்காவை வீழ்த்தி ஆண்டி முர்ரே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

குறித்த வெற்றியானது முர்ரேவின் மீள் வருகையின் ஆரம்பம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் நேற்றைய போட்டியில் படுதோல்வியடைந்த முர்ரே, மீண்டு வருவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

நேற்று எட்முண்ட்டை எதிர்கொண்ட முர்ரே 4-6 மற்றும் 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதேவேளை முழுமையான உடற்தகுதி இல்லாமல் விம்பிள்டன் தொடரில் போட்டியிடுவது அவ்வளவு சிறந்த விடயம் இல்லை என முர்ரே தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தானது ஆண்டி முர்ரே இம்முறை விம்பிள்டன் தொடரில் பங்கேற்பதை சந்தேகத்துக்கிடமாக்கியுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

eastbourne international 2018 andy murray lost news Tamil, eastbourne international 2018 andy murray lost news Tamil, eastbourne international 2018 andy murray lost news Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like