Type to search

மாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்!

Cricket Latest Sports SPORTS SPORTS HEAD LINES Tennis

மாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கனடாவில் ஆரம்பமாகியுள்ள குளோபல் டி20 லீக்கின் (GT20) தொடரின் இரண்டாவது போட்டியி்ல் இலங்கை அணியின் மாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸ் மற்றும் டிஜே பிராவோ தலைமையிலான வின்னிபெக் ஹாவ்க்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

மிகவும் சிறப்பாக ஆரம்பித்துள்ள குளோபல் டி20 லீக்கின் முதல் போட்டியே ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

முதல் போட்டியில் 228 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய டொரெண்டோ நெசனல்ஸ் அணி வான்கூவர் நைட்ஷ் அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் தற்போது அடுத்த போட்டியின் மீது கவனத்தை செலுத்தியுள்ளனர்.

ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கப்போகும் இன்றைய போட்டியில், பல முன்னணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.

டி20 தொடர்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இலங்கை அணியின் லசித் மாலிங்க, சுனில் நரைன், மொஹமட் ஹபீஸ், திசர பெரேரா, டெவைன் ஸ்மித், தசுன் சானக, சந்தீப் லெமைச்சேன் மற்றும் மொய்சி்ஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் மான்ட்ரியல் டைகர்ஸ் அணியில் விளையாடவுள்ளனர்.

அத்துடன் வின்னிபெக் ஹாவ்க்ஸ் அணியில் மே.தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர் டெவைன் பிராவோ, அவுஸ்திரேலிய அணியில் தடைக்குற்பட்டிருந்த டேவிட் வோர்னர், டேவிட் மில்லர், லெண்ட்ல் சிம்மன்ஸ், டெரன் பிராவோ ஆகியோரும் விளையாடவுள்ளனர்.

இன்றைய போட்டியானது கனடா நேரப்படி பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இலங்கை நேரப்படி அதிகாலை 1.30 க்கு நடைபெறவுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Montreal tigers vs Winnipeg Hawks today news Tamil, Montreal tigers vs Winnipeg Hawks today news Tamil, Montreal tigers vs Winnipeg Hawks today news Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like