Type to search

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று! : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்!!!

FIFA 2018 Foot Ball Latest Sports SPORTS SPORTS HEAD LINES Trending

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று! : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிபா உலகக்கிண்ணத் தொடரின் நொக்கவுட் சுற்று இன்று ஆரம்பமாகின்றது.

இதன் முதல் போட்டியில் உலக்ககிண்ண சம்பியன் பட்டங்களை வென்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டின அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இம்முறை உலகக்கிண்ணத்தின் சி குழுவில் விளையாடிய பிரான்ஸ் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், ஒரு போட்டியை சமனிலைப்படு்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டியில் 2-1 என வெற்றிபெற்ற பிரான்ஸ் அணி, இரண்டாவது போட்டியில் பெரு அணியை 1-0 என வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற டென்மார்க் அணிக்கெதிரான போட்டியில் போராடிய பிரான்ஸ் அணி 0-0 என போட்டியை சமப்படுத்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.

எனினும் ஆர்ஜன்டீன அணியை பொருத்தவரையில் தட்டுத்தடுமாறியே நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது.

உலகக்கிண்ணத்தின் அறிமுக அணியான ஐஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியை 1-0 என சமப்படுத்திய ஆர்ஜன்டீன அணி, இரண்டாவது போட்டியில் குரோஷியாவிடம் 0-3 என படுதோல்வியடைந்தது.

எனினும் முக்கியமான இறுதிப்போட்டியில் நைஜீரிய அணியை எதிர்கொண்ட ஆர்ஜன்டீன அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, நொக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

இன்று மோதவுள்ள பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் மொத்தமாக 12 தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் ஆர்ஜன்டீன அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

அதுமாத்திரமின்றி ஆர்ஜன்டீன அணி உலகக்கிண்ணத்தில், இரண்டு போட்டிகளில் பிரான்ஸை எதிர்கொண்டு, குறித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

1930ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 1-0 எனவும் 1978ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 2-1 எனவும் வெற்றிபெற்றது. குறித்த இரண்டு தடவைகளும் பிரான்ஸை வீழ்த்திய ஆர்ஜன்டீனா இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

எனினும் இம்முறை ஆர்ஜன்டீன அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருவதால், வரலாறு எப்படி ஒத்துழைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அத்துடன் பிரான்ஸ் அணி இம்முறை தங்களது ஆதிக்கத்தை அதிகமாக செலுத்தி வரும் நிலையில் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்றைய போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு நடைபெறவுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Argentina vs France world cup 2018 news Tamil, Argentina vs France world cup 2018 news Tamil, Argentina vs France world cup 2018 news Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like