Type to search

சீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..!

Other Sports SPORTS SPORTS HEAD LINES SPORTS TOP STORY

சீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். எனினும், சாய்னா நெவால் தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறினார். pv sindhu advances saina nehwal bows china open,tamil sports,indian sports,badminton news in tamil,tamil news 

ஸாவ் நகரில் நடைபெறும் இப்போட்டியில், சிந்து தனது தொடக்க சுற்றில் உலகின் 39-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சேனா கவாகாமியை எதிர்கொண்டார். போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்களில் கவாகாமியை வீழ்த்தினார்.

அதேபோல், சாய்னா நெவால் தனது தொடக்க சுற்றில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை எதிர்கொண்டார். சுமார் 48 நிமிடங்களுக்கு நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 22-20, 8-21, 14-21 என்ற செட்களில் சங் ஜியிடம் வீழ்ந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியனான இந்தியாவின் மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணை தங்களது முதல் சுற்றில் சீன தைபேவின் லியாவ் மின் சன்/சு சிங் ஹெங் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக 39 நிமிடங்களுக்கு நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் 13-21, 21-13, 21-12 என்ற செட்களில் மானு/சுமீத் இணை வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

pv sindhu advances saina nehwal bows china open

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: