Type to search

இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்தது இலங்கை இளையோர் அணி..!

Cricket SPORTS SPORTS HEAD LINES SPORTS TOP STORY

இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்தது இலங்கை இளையோர் அணி..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பங்களாதேஷில் டாக்கா நகரில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை இளையோர் அணியை வீழ்த்தி இந்தியா இளையோர் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப்பெற்றது. india clinch 19 asia cup beating sri lanka,tamil cricket news,today sports updates,tamil cricket news,final

அவ்வணி சார்பாக யாஷவ் ஜேஸ்வால் 85 ஓட்டங்களையும், அணித்தலைவர் சிம்ரன் சிங் 65 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.பந்து வீச்சில் கலன பெரேரா , கல்ஹார சேனாரத்ன மற்றும் துலித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.

பதிலுக்கு 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 38.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பில் நிஷான் மதுசங்க 49 ஓட்டங்களையும் , நவோத் பரனவிதான 48 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணிசார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷ் தியாகி 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 144 என்ற ஓட்ட வித்தியாசத்தில் 2018ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தை இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.

india clinch 19 asia cup beating sri lanka

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like