டிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி
Share

(Tirreno-Adriatico 2018 stage 2 results news Tamil)
இத்தாலியில் நடைபெற்று வரும் டிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் ஜேர்மனியின் மார்ஸல் கிட்டெல் வெற்றிபெற்றுள்ளார்.
167 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த பந்தயத் தூரத்தை மார்ஸல் கிட்டெல், 4 மணித்தியாலம் 12 நிமிடம் மற்றும் 24 செக்கன்களில் நிறைவுசெய்து வெற்றியை தக்கவைத்துள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தை ஸ்லோவாக்கிய வீரர் பீட்டர் செகன் பிடித்துக்கொண்டதுடன், 3வது இடத்தை இத்தாலியின் ஜியாகொமோ நிஷல்லோ பிடித்துக்கொண்டார்.
இரண்டாவது கட்டத்தில் முதலிடத்தை பிடித்திருந்த மார்ஸல் கிட்டெல், முதல் கட்டத்தில் 27வது இடத்தை பிடித்திருந்தார்.
இதேவேளை டிரைனோ அட்ரியாடிகோ முதல் கட்டத்தின் வெற்றியை இத்தாலியின் டெமியானோ கரூஸோ பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<<Related News>>
- நாட்டில் காணப்படும் பதற்ற நிலை…! முன்னாள் ஜாம்பவான்களின் கோரிக்கை!!!
- சிக்கர் தவான் மீண்டும் அசத்தல்!!! : பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்தியா…
- ஐரோப்பிய லீக் : இலகு வெற்றியை சுவைத்தது அர்செனல்!
- ஆரம்பமானது 112வது வடக்கின் மாபெரும் சமர்!!!
- இந்தியன் வேல்ஸ் ஓபன் முதல் சுற்றில் டெனிஷ் ஷெபவலோவ் வெற்றி
- மாலிங்கவுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா??? : பதில் கூறுகிறார் தேர்வுக்குழு தலைவர்!!!
- தொழில் முறை வீரர்களுடன் விளையாடும் உசைன் போல்ட்!!!
- இந்தியன் வேல்ஸ் ஓபன் முதல் சுற்றில் ஷரபோவா தோல்வி
<<Our other websites>>