தோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது!
Share

Uber Thomas Cup groups announced news Tamil
தாய்லாந்தின் – பேங்கொங் நகரில் ஆரம்பமாகவுள்ள தோமஸ் மற்றும் ஊபர் கிண்ணங்களுக்கான பெட்மிண்டன் தொடரின் குழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தோமஸ் மற்றும் ஊபர் கிண்ணங்களுக்கான போட்டித் தொடர் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
இதில் ஆடவருக்கான தோமஸ் கிண்ணத்தில் இந்தியா, சீனா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் ஏ குழுவில் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை மகளிருக்கான ஊபர் கிண்ணத்தில் இந்திய அணி ஏ குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், ஜப்பான், கனடா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணியை பொருத்தவரையில் கடந்த சீசன்களில் மகளிர் அணி அரையிறுவரை முன்னேறியிருந்த போதும், ஆடவர் அணி கடந்த வருடம் முதல் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது.
தோமஸ் மற்றும் ஊபர் கிண்ண போட்டிகள் மே 20 தொடக்கம் 2ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
<<Related News>>
- பிபா உலகக்கிண்ணத்தில் வீடியோ உதவி நடுவர்கள் தொழினுட்பம்!
- இலங்கை கொடியை ஏந்தி மைதானத்தை சுற்றிவந்த ரோஹித் சர்மா! (காணொளி இணைப்பு)
- நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மெசன் கிரேன் நீக்கம்!
- உதைப்பந்தாட்ட வாழ்வில் தனது 50வது ஹெட்ரிக் கோல்களை அடித்தார் ரொனால்டோ!
- கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு! (காணொளி இணைப்பு)
- ரபாடாவின் தடையை நீக்கியமை குறித்து கருத்து வெளியிட்ட ஆஸி. வீரர்!!!
- எலிமினேட்டர், குவாலிபையர் 2 போட்டிகள் பூனேவுக்கு மாற்றம்!!!
<<Tamil News Group websites>>
Uber Thomas Cup groups announced news Tamil